குருநாகல் மாவட்டத்தில் நான்கு வேட்பு மனுக்கள் நிராகரிப்பு.
குருநாகல் மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்ட 31 வேட்பு மனுக்களில் 4 வேட்பு மனுக்கள் நிராகரிப்புஅதேவேளையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் ஊர்லவமாக செல்ல முற்பட்ட வேளையில் பொலிஸார் தடுத்து நிறுத்தினர். பொலிஸாரின் சட்ட திட்டத்திற்கு இணங்க ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களும் வேட்பாளர்களும் கலைந்து சென்றனர்.இன்று நன்பகல் 12 மணிவுடன் நிறைவடைந்த பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலின் போது குருநாகல் மாவட்டத்தில் ஆங்கீகரிக்கப்பட்ட 21 கட்சிகளும் 10 சுயெச்சைக் குழுக்களும் கட்டுப்பணத்தைச் செலுத்தியிருந்தனர்.இதில் 4 ஆங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் நிராகரிக்கப்பட்டன.
இம்மாவட்டத்தில் 15 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக இம்முறை 17 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளும் 10 சுயெச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றனர்.இதன் போது மாவட்ட செயலகத்திற்கு முன்னால் தேசிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளர் நாமல் கருணாரத்ன, முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா, ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளர் அசோக அபேசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும், புதுமுக வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.
(இக்பால் அலி)