கண்டி கல்விப் பணிமனையில் விமரிசையாக நடைபெற்ற வாணி விழா
கண்டி கல்வி வலயப் பணிமனையின் தமிழ்ப் பிரிவு ஏற்பாடு செய்த வாணி விழா வெகு விமரிசையாக வெள்ளிக்கிழமை (11) கண்டி வலயக் கல்விப் பணிமனையின் கேட்போர் கூடத்தில் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.
கண்டி வலயக் கல்விப் பணிமனையின் திட்டமிடல் பணிப்பாளர். கஸ்தூரி ஆரச்சி இந்நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டார் கண்டி கல்விப் பணிமனையின் தமிழ்ப் பிரிவின் கோட்டக் கல்விப் பணிப்பாளர் செ. தமிழ்ச் செல்வன் “நவராத்திரி நல்கும் வாழ்க்கைத் தத்துவங்கள்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்த பாடகர் டி. ஹெலன் பக்தி பாடல் இசைத்தார். உதவிக் கல்விப் பணிப்பாளர் ரமேஷ் பாபுவின் வரவேற்புரையும் ஆசிரிய ஆலோசகர் சுகுமாரின் நன்றிரையும் இடம்பெற்றது.இந்த வாணி விழாவில் கல்விப் பணிப்பாளர் தீப்தி பிரியதர்ஷனீ, பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஆர்.எஃப். அமீன் உட்பட அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் வர்த்தக பிரமுகர்கள்,சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
வளவாளர் இலங்கேஷ்வரி நிகழ்ச்சியை தொகுத்தளித்தார்.இந்த வாணி விழாவை முன்னிட்டு பல்வேறு கலை, கலாசார நிகழ்ச்சிகளும் மேடையேற்றப்பட்டன.
(ரஷீத் எம். றியாழ்)