உள்நாடு

புத்தளம் ஆசிரியர் வாண்மைத்துவ விருத்தி நிலையம் மழை வெள்ளத்தில் மூழ்கியது

புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை வளாகத்தில் அமையப்பெற்றுள்ள புத்தளம் ஆசிரியர் வாண்மைத்துவ விருத்தி நிலையமானது தற்போது பெய்துவரும் மழை காரணமாக மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக ஆசிரியர் கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சி செயற்பாடுகள் மிக மோசமாகப் பாதிப்புக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் கல்வி அமைச்சு ஆசிரியர் கல்வி நிருவாகக் கிளையின் முகாமையில் செயற்படும் 112 ஆசிரியர் வாண்மைத்துவ விருத்தி நிலையங்களுள் சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூல ஆசிரியர் வாண்மைத்துவ வேலைத்திட்டங்களை அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்களுக்கு அதிக எண்ணிக்கையில் மேற்கொள்ளும் நிலையமாக புத்தளம் ஆசிரியர் வாண்மைத்துவ விருத்தி நிலையம் (Professional Development Center for Teachers) விளங்குகிறது. இதற்கு மேலதிகமாக கல்வி அமைச்சினதும், மாகாண கல்வித் திணைக்களம் மற்றும் புத்தளம் கல்வி வலயத்தின் சேவைக்கால ஆசிரியர் பயிற்சி செயற்பாடுகளும் இடம்பெறும் நிலையமாக புத்தளம் நிலையம் விளங்குகிறது.

புத்தளம் ஆசிரியர் வாண்மைத்துவ விருத்தி நிலையம் எதிர்கொண்டுள்ள பாதிப்பிலிருந்து விடுபட்டு தமது ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித் திட்டங்களை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கும், புத்தளம் சமூகத்தின் முக்கியமான வளநிலையமான இதனை பாதுகாப்பதற்காக பின்வரும் விதமான ஒத்துழைப்பு மற்றும் அனுசரணைகளை முகாமையாளர் எதிர்பார்க்கின்றார்

1.ஆசிரியர் நிலைய செயற்பாடுகளை தடையின்றி மேற்கொள்வதற்கு புத்தளம் நகரிலுள்ள பாடசாலைகளில் காணப்படும் வசதிகளை (கட்டடம்/வளங்கள்) தற்காலிகமாக வழங்கி உதவுதல்.

  1. ஆசிரியர் நிலையத்திற்கு புதிய இடம் மற்றும் புதிய கட்டடத்தை நிறுவுவதற்கு அனுசரணைகளைப் (அரச சார்பற்ற )பெற்றுக் கொள்ள உதவுதல்.

மேலதிக தகவல்களுக்கு
எம். எப். முஹம்மட் றியாஸ்
(SLTES),
முகாமையாளர்,
ஆசிரியர் வாண்மைத்துவ விருத்தி நிலையம்,
புத்தளம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *