விளையாட்டு

மே.இ.தீவுகளை எதிர்கொள்ளும் இலங்கையின் ரி20 குழாம் அறிவிப்பு

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடருக்கான சரித் அசலங்க தலைமையிலான இலங்கைக் குழாம் இன்று (09) இலங்கை கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 ரி20 மற்றும் 3 ஒருநாள் தொடர்களில் இலங்கை அணிக்கு எதிராகப் பங்கேற்கின்றது. அதனடிப்படையில் ரி20 தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் குழாம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்க இன்றைய தினம் இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இலங்கை அணியின் தலைவராக சரித் அசலங்க தொடர்ந்தும் இலங்கை அணியை வழிநடாத்தவுள்ளார். மேலும் 17 வீரர்கள் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டிருக்க இறுதியாக இந்திய அணிக்கு எதிரான ரி20 தொடரில் பங்கேற்ற வீரர்களே இத் தொடரிலும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக இத் தொடரில் முன்னாள் அணித் தலைவரும், சகலதுறை வீரருமான தசுன் சானக்க நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தினேஷ் சந்திமால் அணியில் இடம்பெற்றுள்ளார்.

இலங்கை ரி20 குழாம்

சரித் அசலங்க,

பெத்தும் நிஸ்ஸங்க,

குசல் மெண்டிஸ்,

குசல் ஜனித் பெரேரா,

கமிந்து மெண்டிஸ்,

தினேஷ் சண்டிமால்,

அவிஷ்க பெர்னாண்டோ,

பானுக ராஜபக்ச,

வனிந்து ஹசரங்க,

மகேஷ் தீக்ஷன,

துனித் வெல்லாலகே,

ஜெஃப்ரி வாண்டர்சே,

சமிந்து விக்கிரமசிங்க,

நுவான் துஷார,

மதீஷ பத்திரன,

பினுர பெர்னாண்டோ,

அசித்த பெர்னாண்டோ

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *