காலி கோட்டை இப்றாஹிமியாவில் மீலாத் விழா நிகழ்வு
இறைத் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தையெட்டி காலி கோட்டை இப்ராஹீமியா அரபுக் கல்லூரியில் மாபெரும் மீலாது விழா கலாபீட மண்டபத்தில் (6-10-2024) நடைபெற்றது.
கலாபீட நிர்வாக சபை தலைவர் அல்-ஹாஜ் எம்.நுஸ்கி முஹம்மத் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் ஷாதுலிய்யாத் தரிக்காவின் கலீபத்துல் குலபா காலி அலிய்யா இஸ்லாமிய சட்டக் கல்லூரி பணிப்பாளர் அல்-உஸ்தாத் மௌலவி எம்.இஸட்.முஹம்மத்ஸுஹூர் (பாரி) பிரதம அதிதியாகவும் மாத்தறை மின்னத்துல் பாஸிய்யா அரபுக் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் ரயீஸுல் முகத்தம் மௌலவி அஸ்ஸெய்யித் பஸ்மின் மௌலானா (முர்ஸி) விசேட பேச்சாளராகவும் கலந்து கொண்டார்.
கலாபீட பணிப்பாளரும் கொழும்பு அஜ்வாத் அல்பாஸி அரபுக் கல்லூரி விரிவுரையாளருமான ரயீஸுல் முகத்தம் மௌலவி எம்.எப்.எம்.பாஸில் (பஹ்ஜி) அதிபர் கலீபதுஷ்ஷாதுலி மௌலவி முகம்மத் ரஸூக் (பஹ்ஜி) ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் கல்லூரி மாணவர்களிடையே தமிழ்,சிங்களம்,ஆங்கிலம் மற்றும் அரபு மொழிகளில் பேச்சுப்போட்டி கஸீதா உட்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
பிரதம பேச்சாளர் மௌலவி அஸ்ஸெய்யித் பஸ்மின் மௌலானா (முர்ஸி) இறைத் தூதர் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் முன்மாதிரி மிகு வாழ்க்கை பற்றி எடுத்துக் கூறினார்.
தென் இலங்கையில் மிகவும் பழமை மிகு அரபுக் கல்லூரியன பஹ்ஜதுல் இப்ராஹீமியாவின் வளர்ச்சி குறித்தும் அவர் பாராட்டிப் பேசினார். ஸேர் முஹம்மத் மாக்காண் மாக்கார் குடும்பத்தினர் இக் கலாபீட முன்னேற்றத்தில் ஆற்றிய உயரிய பணிகளை பலரும் இங்கு பாராட்டினர்.
விழாவில் அஸ்ஸெய்யித் முபாரக் மௌலானா, உட்பட கலாபீட விரிவுரையாளர்கள்,உலமாக்கள்,மாணவர்கள்,பழைய மாணவர்கள்,பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
(பேருவளை பீ.எம்.முக்தார்)