உள்நாடு

முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்கள்

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதா? அல்லது ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து போட்டியிடுவதா? என்ற நீண்ட இழுபறிவுக்கு மத்தியில் இன்று கண்டியில் உள்ள தனியார் விடுதியில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று ஒன்று கூடியுள்ளனர்.

கடந்த பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சக்தியோடு கூட்டிணைந்து 06 வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது.

ஆனால் இம்முறை முகா 06 வேட்பாளர்களை நிறுத்துவதில் பாரிய சிக்கலை எதிர் கொண்டுள்ளது.

அம்பாறைத் தொகுதியில் சிங்கள பெரும்பான்மை வாக்குகள் முன்பைவிட அதிகரித்துள்ளதால் முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களை விட விருப்பு வாக்கில் சிங்கள வேட்பாளர்கள் அதிகமாக பெறுவதற்கு வாய்ப்புள்ளதே இத் தாமதத்திற்கு காரணமாகும்

இவ் யதார்த்தத்தை புரிந்து கொண்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் மூன்று வேட்பாளர்களை நிறுத்துவதன் மூலம் தமது ஆசனத்தை தக்க வைக்க முடியும் என நம்புகின்றனர்.

இருந்தாலும் மூன்று வேட்பாளர்களை நிறுத்துவதால் கட்சியின் முக்கிய பிரதேசங்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பாதிக்கப்படுவதால் கட்சியின் வாக்குகள் மாற்று கட்சிகளுக்கு சென்று விடும் என்பதுடன் எதிர் காலத்தில் கட்சியை விட்டு ஆதரவாளர்கள் வெளியேறும் ஆபத்தும் உள்ளதென சுட்டிக் காட்டப்பட்டுள்ளது

அத்தோடு கட்சிக்கு எதிராக செயற்பட்ட நபர்களுக்கு தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்க கூடாது என பலமான எதிர்ப்பலைகள் கட்சிக்குள்ளும் பொது மக்கள் மத்தியிலும் கிழம்பியுள்ளதால் கட்சி தீர்மானம் எடுப்பதில் பெரும் சவாலை எதிர் கொண்டுள்ளது.

இப்படியான இறுக்கமான நேரத்தில் கட்சியின் தலைமை அம்பாறை மாவட்ட முகாவின் முக்கியஸ்தர்களை கண்டிக்கு அழைத்துள்ளது.

தற்போது கண்டியில் உள்ள தனியார் விடுதியில் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான இறுதிக் கூட்டம் நடைபெறுகின்றது.

இக் கூட்டத்தில் ஹரீஸ். பைசல் காசிம். மன்சூர். தவம் .கபூர் லோயர்.உதுமாலெப்பை . அன்வர் நெளசாத். வாஸித் ஆகியோர் தமக்கான வாய்ப்புக்காக காத்து நிற்கின்றனர்.

இதேவேளை இன்று மாலை வேட்பாளர்கள் யார் என்பது தொடர்பான முழு விபரம் வெளியிடப்படும் என கட்சியின் தலைமை ரவூப் ஹக்கீம் எம்மிடம் தெரிவித்தார்

( ஏ.எல்.றமீஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *