மஹிந்திரா ஐடியல் ஃபைனான்ஸின் புதிய முகாமைத்துவப் பணிப்பாளராக முஃபத்தல் சுனியா நியமனம்
Mahindra Financeஇன் துணை நிறுவனமான Mahindra Ideal Finance Limited (MIFL) புதிய முகாமைத்துவப் பணிப்பாளராகவும், பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் திரு. முஃபத்தல் சுனியாவை நியமிப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது. MIFL இன் பிரதம நிறைவேற்று அதிகாரியாக முன்னர் பணியாற்றிய திரு. துமிந்த வீரசேகர ஓய்வுபெற்றதை அடுத்து, அந்த வெற்றிடத்திற்கு திரு. முஃபத்தல் நியமிக்கப்பட்டுள்ளார்.
தனது புதிய நியமிப்பில், திரு. முஃபத்தல், குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் (SMEகள்) மற்றும் கிராமப்புற மக்களுக்கு MIFL இன் டிஜிட்டல் கடன் வழங்கும் திறன்களை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தவுள்ளார். மேலும் நிறுவனத்தின் வாடிக்கையாளர் மதிப்பை மேலும் மேம்படுத்தும் வகையில் நிறுவனத்தின் சேவைகளை மேலும் விரிவுபடுத்த அவர் எதிர்பார்த்துள்ளார்.
இந்த நியமனம் குறித்து Mahindra Finance நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான Raul Rebello கூறுகையில், “முஃபத்தல் மஹிந்திரா குழுமம் மற்றும் Mahindra Finance ஆகியவற்றில் பல்வேறு தலைமைப் பதவிகளை வகித்துள்ளார். இலங்கையில் ஒரு வலுவான நிதிச் சேவை வர்த்தகத்தை கட்டியெழுப்ப துமிந்தவின் பங்களிப்புக்காக நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், மேலும் எதிர்காலத்தில் MIFL இன்னும் பெரிய வெற்றியைப் பெற முஃபத்தலின் அனுபவம் உதவும் என்று நான் நம்புகிறேன்.” என தெரிவித்தார்.
Mahindra Ideal Finance நிறுவனத்தின் தலைவர் திரு. நளின் வெல்கம கருத்து தெரிவிக்கையில், “சர்வதேச அனுபவத்தைக் கொண்ட முஃபத்தல் நிறுவனத்துடன் இணைந்து கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நிதித் துறையைப் பற்றிய அவரது விரிவான அறிவு, சந்தையில் வளரவும் வெற்றிபெறவும் புதிய வழிகளைக் கண்டறிய நிறுவனத்திற்கு உதவும்.” என தெரிவித்தார்.
Mahindra Financeஇனால் செய்த முதலீடு MIFL இன் அங்கீகாரத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது, இதன் விளைவாக நிறுவனம் Fitch Ratings மூலம் AA- (Outlook Stable) என்ற உயர் கடன் மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இந்த மதிப்பீடு MIFL நிதி ரீதியாக நிலையானது மற்றும் நம்பகமானது, இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றாக அதை நிலைநிறுத்துகிறது.
Mahindra & Mahindra Financial Services Limited தொடர்பில்
மஹிந்திரா குழுமத்தின் ஒரு அங்கமான Mahindra & Mahindra Financial Services Limited (Mahindra Finance) இந்தியாவின் முன்னணி வங்கி சாரா நிதி நிறுவனங்களில் ஒன்றாகும். நாட்டின் கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புற சந்தைகளை இலக்காகக் கொண்டு, நிறுவனம் இந்தியாவில் உள்ள 10 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தொழில் முனைவோர் அபிலாஷைகளை நிறைவேற்ற உதவியுள்ளதுடன், 5-12 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்துக்களை நிர்வகிக்கிறது. நிறுவனம் வாகனங்கள் மற்றும் டிராக்டர்களுக்கான முன்னணி நிதி நிர்வாகியாக உள்ளது மற்றும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கு கடன்கள் மற்றும் நிலையான வைப்புத் திட்டங்களை வழங்குகிறது. Mahindra Financial 1,370 அலுவலகங்களைக் கொண்டுள்ளது மற்றும் இந்தியா முழுவதும் 480,000 கிராமங்கள் மற்றும் 7,500 நகரங்களில் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகிறது.
Great Place to Work மூலம் 2023 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த நிறுவனங்களில் Mahindra Finance 59வது இடத்தைப் பிடித்துள்ளது.
Mahindra Finance CSR அறக்கட்டளையானது, கம்பெனிகள் சட்டம், 2013ன் பிரிவு 8ன் விதிகளின் கீழ், நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் CSR தொடர்பான திட்டங்களை மேற்கொள்வதற்கான பூரண உரிமம் பெற்ற துணை நிறுவனமாகும்.
Mahindra Financeஇன் துணை நிறுவனமான Mahindra Rural Housing Finance Limited (MRHFL), இந்தியாவின் கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புற பகுதிகளில் உள்ள தனிநபர்களுக்கு வீடு வாங்குதல், புதுப்பித்தல் மற்றும் கட்டுமானத்திற்காக கடன்களை வழங்குகிறது.
Mahindra Insurance Brokers Limited (MIBL) என்பது Mahindra Financeன் காப்புறுதித் தரகு துணை நிறுவனம் மற்றும் நேரடி மற்றும் மீள் காப்புறுதித் தரகு சேவைகளை வழங்கும் உரிமம் பெற்ற கூட்டு தரகர் ஆகும்.
Mahindra Manulife Investment Management Private Limited நிறுவனம் Mahindra Manulife Mutual Fund இன் முதலீட்டு நிர்வாகியாக செயல்படுகிறது.
Mahindra Manulife Trustee Private Limited (MMTPL) நிறுவனம் Mahindra Manulife Mutual Fund இன் அறக்கட்டளை நிறுவனமாக செயல்படுகிறது.
Mahindra Ideal Finance Limited (MIFL) என்பது Mahindra Financeஇன் துணை நிறுவனமாகும், இதில் நிறுவனம் 58.2% பங்குகளைக் கொண்டுள்ளது. MIFL இலங்கை சந்தைக்கு பரந்த அளவிலான நிதி சேவைகளை வழங்குகிறது.
Mahindra Finance நிறுவனத்திற்கு, Mahindra Finance USA LLC என்ற கூட்டு முயற்சியையும், மஹிந்திரா வாகனங்களுக்கு நிதியுதவி வழங்க, அமெரிக்காவில் உள்ள De Lage Landen நிதி நிறுவனத்துடன் இணைந்து கொண்டுள்ளது. இது Rabo வங்கியின் துணை நிறுவனமாகும்.
Mahindra Finance பற்றி மேலும் அறிய, www.mahindrafinance.com ஐப் பார்வையிடவும். Twitter மற்றும் Facebook: @MahindraFin
Mahindra தொடர்பில்
1945 இல் நிறுவப்பட்ட மஹிந்திரா குழுமம், 100 நாடுகளில் 260,000 பணியாளர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மரியாதைக்குரிய பன்னாட்டு நிறுவனங்களில் ஒன்றாகும். இது இந்தியாவின் முன்னணி விவசாய உபகரணங்கள், பயன்பாட்டு வாகனங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதிச் சேவைகளை வழங்குவதோடு, உலகின் மிகப்பெரிய டிராக்டர் நிறுவனமாகவும் உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வேளாண் வணிகம், சரக்கு போக்குவரத்து, சுற்றுலா மற்றும் சொத்து மேம்பாட்டுத் துறைகளிலும் வலுவாக உள்ளது.
மஹிந்திரா குழுமம், சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாக (ESG) நடைமுறைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் நகர்ப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் பணிபுரியும் ஒரு உலகளாவிய தலைவர். அவர்களின் நோக்கம் “ எழுச்சி ” என்ற அவர்களின் கொள்கைகளுக்கு ஏற்ப மக்கள் மற்றும் வணிகங்கள் முன்னேரவும் வெற்றி பெறவும் உதவுவதாகும்.