உள்நாடு

அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் சர்வதேச RIMES அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துறையாடல்

களுத்துறை மாவட்டத்தில் ஏற்படும் அனர்த்த நிலைமைகள் தொடர்பில் முன்னோடி எச்சரிக்கை தெரிவிக்கும் செயற்திட்டங்கள் சம்பந்தமாக உலகலாவிய RIMES அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் மாவட்ட செயலாளர் தலைமையில் மாவட்ட பணிமனையில் இடம்பெற்றது.

   இதில் மேற்படி அமைப்பின் பிரதிநிதிகளாக   அனர்த்தங்கள் தொடர்பான முன்னோடி எச்சரிக்கை  சிரேஷ்ட நிபுணரும் திட்ட முகாமையாளருமான மர்க் மார்க்கஸ்,  திட்ட அதிகாரி மிசேல் சந்தோஷ், நீரியல்வள நிபுணரும் குறிப்பிட்ட அமைப்பின் இலங்கை பினதிநிதியுமான எஸ்.சுமணசேகரவும் களுத்துறை மாவட்ட செயலகம் சார்பில் மாவட்ட செயலாளர், ஜனக கே குணவர்தன,  மேலதிக செயலாளர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

      களுத்துறை மாவட்டத்தில் ஏற்படும் அனர்த்த நிலவரங்கள் சம்பந்தமாக சர்வதேச அமைப்பின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்குமுகமாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளரினால் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.இதனையடுத்து அமைப்பின் பிரதிநிதிகள் களுத்துறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அடுத்த வேலைத் திட்டங்கள் சம்பந்தமாக செயல்முறை விளக்கமொன்றை சமர்ப்பித்தனர்.மாவட்ட செயலாளரும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பினதிநிதிகளும் மாவட்டத்தின் குறிப்பிட்ட துறைசார்ந்த தேவைப்பாடுகள் சம்பந்தமாக சர்வதேச அமைப்பின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தனர்.

(எம்.எஸ்.எம்.முன்தஸிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *