பாணந்துறை அல்பஹ்ரியா தேசிய பாடசாலை மாணவி சிங்கள மொழி மூலம் தோற்றி 9A தர சித்தி
பாணந்துறை அல்பஹ்ரியா தேசிய பாடசாலை மாணவி எம்.எப்.பாத்திமா பர்வீன் கடந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையில் சிங்கள மொழி மூலம் தோற்றி ஒன்பது ஏ தர சித்திகளுடன் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்றுள்ளார்.
களுத்துறை மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளின் சிங்கள மொழி மூலமான கடந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் ஒன்பது ஏ தர சித்தியாக மாணவி பர்வீனின் சித்தி அமைந்துள்ளது.இவர் பாணந்துறை அம்பலந்துவ முஹம்மத் பாயிஸ் பாதிமா ரிஹானா தம்பதிகளின் புதல்வியாவார்.
இப்பாடசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக சிங்கள மொழி மூலம் மேற்படி பரீட்சைக்குத் தோற்றிய மாணவி பர்வீன் ஒன்பது ஏ தர சித்திகளைப் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.இவரை அதிபர் எம்.ஐ.எம்.ரிஸான் உள்ளிட்ட பாடசாலை சமூகமும் பெற்றோர் பழைய மாணவர்களும் பாராட்டி வாழ்த்துகின்றனர்.
இக்கல்லூரியில் கடந்த 2014 ஆம் ஆண்டு தரம் 6 சிங்கள மொழி மூலமான வகுப்புகள் ஐந்து ஆசிரியர்களுடன் தொண்டர் ஆசிரியர்களையும் இணைத்து ஆரம்பிக்கப்பட்துடன் 2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்குத் தோற்றி நல்ல பெறுபேறுகளையும் பெற்றுள்ளதாக அதிபர் ரிஸான் மேலும் தெரிவித்தார்.
(எம்.எஸ்.எம்.முன்தஸிர்)