தேர்தல் சட்டங்கள் தொடர்பான ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு.
தேர்தல் தொடர்பான போலிச் செய்திகளை அடையாளம் காணல் தேர்தல் சட்டங்களின் அடிப்படையில் செய்திகளை அறிக்கையிடல் சம்பந்தமாக ஊடகவியலாளர்களுக்குகான ஒரு நாள் செயலமர்வு இன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட மட்டு ஊடக அமையத்தின் தலைமையில் மட்டக்களப்பு கல்லடி ரிவேரா ஹாட்டலில் நடைபெற்ற மேற்படி செயலமர்வில் ஓய்வு பெற்ற உதவி தேர்தல் ஆணையாளர் எம்.எம் முகமட் மற்றும் ஹாஸ்டேக் தலைமுறையின் திட்ட முகாமையாளர் கே.ஏ.எம்.சபீர் ஆகியோர் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களுக்கான தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் தொடர்பாக வெளியாகும் போலிச் செய்திகள் தொடர்பான விரிவுரைகளை வழங்கினர்.
ஹஸ்டெக் தலைமுறையின் அனுசரணையில் மட்டு ஊடக அமையம் நடாத்திய மேற்படி செயலமர்வில் மட்டு ஊடக அமையத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார்செயலாளர் செ.நிலாந்தன், பொருளாளர் ஏ.கிருஸ்டிராஜ் ஆகியோர் கலந்து கொண்டதுடன். மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்.
குறித்த செயலமர்வில் இலங்கை அரசியலமைப்பில் உள்ள தேர்தல் சட்டங்கள், பாராளுமன்ற தேர்தல் சட்டங்கள், தேர்தல் தொடர்பான செய்திகளை ஊடகங்கள், ஊடகவியலாளர் எவ்வாறு வெளியிட வேண்டும் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பல்வேறுபட்ட தகவல்கள் ஊடகவியலாளர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டன.
(எஸ்.எம்.எம்.முர்ஷித்)