தேசிய மக்கள் சக்தி களுத்துறை மாவட்டத்தில் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களை பெறுவது உறுதியானது
நாட்டின் தேர்தல் சரித்திரத்தில் முதல் தடவையாக களுத்துறை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள பதினொரு பாராளுமன்ற உறுப்பினர்களில் எட்டு உறுப்பினர்களை தேசிய மக்கள் சக்தி வெற்றி கொள்வதுடன் மாவட்டத்தில் எழுபது வீதமான மக்கள் ஆசிர்வாதத்தையும் எமது அணி பெற்றுக்கொள்ளும் என தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்டத்துக்கான தலைமை வேட்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்டத்துக்கான வேட்பாளர் பத்திரத்தில் கையொப்பமிடும் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறுதெரிவித்தார்.
ஜனாதிபதி தலைமையில் பலமான அரசாங்கம் அமைக்கப்படும். தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற தேர்தலில் பலமான,உறுதியான வெற்றியைப் பெறுவது உறுதியானது.இன்று ரணில் ஒரு புறம்.சஜித் ஒரு புறம். பொஹட்டுவ சின்னாபின்னமாகியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
களுத்துறை மாவட்டத்துக்கான பதினொரு பேர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவுக்கான வேட்பாளர் பட்டியலில் பதினான்கு வேட்பாளர்கள் இடம்பெறுகின்றனர்.தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் விஷேட வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
எம்.எஸ்.எம்.முன்தஸிர்