உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 103 வயது சிங்கள ஆசிரியைக்கு கௌரவம்
உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இலங்கையிலேயே 103 வயதைக் கடந்துள்ள ஆசிரியையாக அடையாளம் காணப்பட்ட சிங்கள ஆசிரியை ஒருவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
வேயங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த ஐ. வி லீலாவதி எனும் சிங்கள ஆசிரியையே இவ்வாறு கௌரவிக்கப்பட்டவராவார். 1949 ஆண்டு தொடக்கம் சுமார் 39 ஆண்டுகள் ஆசிரியர் சேவையில் பணியாற்றி இவர் ஓய்வு பெறும் போது பிரதி அதிபராக ஓய்வு பெற்றார்.
இவர் பணியாற்றிய பாடசாலைகளில் ஒன்றான வேயங்கொட புனித மரியாள் கல்லூரியின் பழைய மாணர்களே இந்த கௌரவிப்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வு இம்முறை நாடெங்கும் நிகழ்ந்த ஆசிரியர் தின விழாக்களில் ஒரு வித்தியாசமான நிகழ்வாகப் பேசப்படுகின்றது.
(ரஷீத் எம். றியாழ்)