அல்-மிர்அத்துஷ் ஷாதுலிய்யா ஸாவியாவில் 92 ஆவது வருட புனித ஸஹீஹுல் புஹாரி தமாம்
வரலாற்று புகழ் மிகு பேருவளை சீனன்கோட்டை பிட்டவளை அல்-மிர்அத்துஷ் ஷாதுலிய்யா ஸாவியாவில் 92 ஆவது வருட புனித ஸஹீஹுல் புஹாரி தமாம் மஜ்லிஸ் 6 ஆம் திகதி (2024-10-06) கலீபதுஷ்ஷாதுலி மெளலவி எம்.எம் ஸெய்னுலாப்தீன் (பஹ்ஜி) தலைமையில் நடைபெற்றது.
5 ஆம் திகதி மாலை புனித ஸுப்ஹானா மெளலூத் தமாம், வலீபா யாக்கூத்தியா, ஹழரா திக்ர் மஜ்லிஸுடன் மார்க்கச் சொற்பொழிவும் இடம் பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ஸாவியா இமாம் கலீபதுஷ்ஷாதுலி மெளலவி முஹம்மது பாரூக் (மக்கி) இரவு சொற்பொழிவாற்றினார்.
இந்த ஸாவியாவை அமைத்து புனித ஸஹீஹுல் புஹாரி மஜ்லிஸை ஆரம்பித்த ஆத்மீக ஞானி அஷ்ஷெய்ஹ். சேகுனா அப்பா ரஹ்மத்துல்லாஹி அவர்களுக்காகவும், அவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள் அன்று முதல் இன்று வரை பங்களித்த அனைவருக்காகவும் துஆப் பிரார்த்தனையும் நடாத்தப்பட்டது.
தமாம் மஸ்லிஸில் கலீபதுஷ்ஷாதுலி மெளலவி எம்.ஜே.எம் பஸ்லான் (அஷ்ரபி- பீ.த) விஷேட சொற்பொழிவாற்றினார்.
கலீபதுஷ்ஷாதுலிகளான மெளலவி எம்.ஜே.எம் ரபீக் (பஹ்ஜி), முஹம்மத் பைரூஸ் (பஹ்ஜி) அஸ்ஸெய்யித் அலவி ஸாலிஹ் மெளலானா (முர்ஸி) உட்பட ஸாதாத்மார்கள் உலமாக்கள், சீனன்கோட்டை பள்ளிச்சங்க தலைவர் ஏ.எச்.எம் முக்தார் ஹாஜியார் உட்பட உறுப்பினர்கள், மிர்அதுஷ் ஷாதுலிய்யா நிர்வாகிகள், முன்னாள் பலஸ்தீன தூதுவர் பெளஸான் அன்வர் உட்பட நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த இஹ்வான்கள் பெருமளவிலானோர் பங்கா பற்றினர்.
நாட்டின் சாந்தி, சமாதானம், சுபீட்சத்திற்காகவும் பலஸ்தீன மற்றும் லெபனான் மக்களுக்காவும் மஜ்லிஸ் இறுதியில் கலீபதுஷ்ஷாதுலி மெளலவி ஸெய்னுலாப்தீன் (பஹ்ஜி) துஆப் பிரார்த்தனை புரிந்தார்.
மஜ்லிஸில் பங்குபற்றிய ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
(பேருவளை பீ.எம் முக்தார்)