தளுவை விகாராதிபதிக்கு எதிராக கண்டக்குளி மற்றும் கற்பிட்டி மதகுருமார்களினால் பொலிஸில் முறைப்பாடு
கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.ஏ.எதிரிசிங்க வின் போதைக்கு எதிரான செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்படும் தளுவை விகாராதிபதியின் செயற்பாடுகளை கண்டித்தும், அவருக்கு எதிராகவும் கண்டக்குளி விகாராதிபதி, கற்பிட்டி இந்து ஆலய குருக்கள் மற்றும் மனிதாபிமான சகோதரத்துவ நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஆகியோர் ஒன்றிணைந்து இன்று (07) கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.
இதன் போது கருத்து தெரிவித்த கண்டக்குளி விகாராதிபதி, “கற்பிட்டி பிரதேசத்தில் நிலவும் போதைப் பொருள் விற்பனைக்கு எதிராக தற்போது கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.ஏ எதிரிசிங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் தீவிரமாக செயற்படு போதையற்ற கற்பிட்டி நகரை உருவாக்க முயற்ச்சிக்கும் இத்தருணத்தில் அவரின் இச் செயற்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக தளுவை விகாராதிபதியின் செயற்பாடுகள் காணப்படுகின்றது. அந்த விகாராதிபதியிற்கு எதிரான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.
அதனை அண்மையாக வைத்தே இன்று அவருக்கு எதிராக கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நம்புகின்றேன் நாம் இது பற்றி தொடர்ந்து அவதானத்துடன் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன் )