உள்நாடு

கொல்லந்தலுவ அல் இக்ரா பாலர் பாடசாலையில் சிறுவர் மற்றும் ஆசிரியர் தின நிகழ்வு

கொல்லந்தலுவ அல் இக்ரா பாலர் பாடசாலையில் சிறுவர் தின மற்றும் ஆசியர் தின கொண்டாட்டம் இன்று (7) மிகவும் சிறப்பாக பாலர் பாடசாலையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் போது மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றிருந்தமை சிறப்பம்சமாகும்.இன்னும் அனைத்து மாணவர்களுக்கும் அன்பளிப்புக்களும் வழங்கப்பட்டன. அத்துடன் இப் பாலர் பாடசாலையின் ஆசிரியர்களுக்கும் சிறிய அன்பளிப்பு ஒன்றும் மாணவர்களினால் வழங்கப்பட்டது.

இன்னும் இதற்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும் பாலர் பாடசாலை சமூகம் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

(ஏ.எம்.எம். இப்ராஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *