Sunday, October 6, 2024
Latest:
உள்நாடு

ஒலுவில் அல் -ஜாயிஷா G.C.E O/L 2023 (2024) பரிட்சையில் இம் முறையும் 100% சித்தியைப் பெற்று சாதனை..!

இம் முறை வெளிவந்த G.C.E O/L -2023 (2024) பரீட்சையில் ஒலுவில் அக்/அக் – ஜாயிஸ்ஸா மகளிர் கல்லூரி அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் 100% சித்தி மட்டத்தைப் பெற்று கடந்த 8 வருடங்களாக பெற்று வந்த100% சித்தி வீதத்தை தக்க வைத்துள்ளதோடு இம்முறை அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் பெறுபேற்றுப் பகுப்பாய்வு அடிப்படையில் 1ம் இடத்தையும் பெற்றுள்ளது.

ஜாயிஷாக் கல்லூரியின் இப்பெறுபேறானது அக்கரைப்பற்று கல்வி வலயம் கிழக்கு மாகாணத்தில் 4ம் இடத்தை பெறுவதற்கும் , கிழக்கு மாகாண கல்வித் திணைக்களமானது தேசிய மட்டத்தில் 2ம் இடத்தை பெறுவதற்கும் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

இப்பெறுபேற்றைப் பெற்ற மாணவிகள், அவர்களது பெற்றோர்கள் , இம் மாணவிகளுக்கு கற்பித்த ஆசிரிய ஆசிரியைகள் ,பிரதி அதிபர்,உதவி அதிபர்,பகுதித் தலைவர்கள் துணை உதவிகள் வழங்கிய ஏனைய ஆசிரியர்கள் ,பணியாட்கள் அனைவருக்கும் கல்லூரியின் அதிபர் இஸட் கலீலுர் றஹ்மான் நன்றிகளைத் தெரிவித்தார்.

(இஸட்.ஏ.றஹ்மான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *