நுரைச்சோலை பாடசாலையில் தங்க மகனுக்கும் தேசிய மட்டத்திற்கு தெரிவான தமிழறிவு மாணவிகளுக்கும் செங்கம்பள வரவேற்பு
குருணாகல் ஹிஸ்புல்லாஹ் மத்திய கல்லூரியில் நடைபெற்ற மாகாணமட்ட தமிழ் மொழித்தின போட்டிகளில் “தமிழறிவு வினாவிடை” போட்டியில் நுரைச்சோலை தேசிய பாடசாலை முதலாம் இடத்தைப் பெற்று முதல் பாடசாலையன் வரலாற்றில் முதல் தடவையாக தமிழ் மொழித்தின நிகழ்ச்சிகளில் அகில இலங்கை மட்டத்திற்கு எமது பாடசாலை தெரிவாகியுள்ளது.
(இடமிருந்து வலம்)
எம்.ஆர். றிஸ்னத் பானு
எப்.எப். இல்மா
ஜே.எப். ஜெஸ்னா
ஆர். றாயிஷா-ஆசிரியை
எம். றியாஸ் முஹமட் -பணிப்பாளர்-
எம்.ஐ.எம். இம்றான் கான் -அதிபர்-
எஸ். எச். அன்ஹா மரியம்
பீ. எப். சப்ரா
அத்தோடு ‘தங்க மகன்’ என்ற பெருமைக்கு ஏற்கனவே சொந்தமான முஹம்மது சியாம் முஹம்மது அர்ஹம் அவர்களுக்கும் இவ்வைபவத்தில் சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.
இவர்களுக்கான செங்கம்பள வரவேற்பும், பதக்கம் அணிவித்த நிகழ்வும் நேற்று (04) பாடசாலை முன்றலில் அதிபர் எம்.ஐ.எம். இம்றான் கான் அவர்கள் தலைமையில் நடந்தேறியது.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)