ஐக்கிய தோட்டத் தொழிலாளர் ஒன்றியம் இரத்தினபுரி மாவட்டத்தில் தனித்துப் போட்டி
ஐக்கிய தொழிலாளர் ஒன்றியம் (UWC) இரத்தினபுரி மாவட்டத்தில் சுயேட்சையாக தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அத்தொழிற்சங்கத்தின் தலைவர் சண்முகம் திருச்செல்வம் தெரிவித்துள்ளார்.
காவத்தையில் அமைந்துள்ள இத் தொழிற்சங்கத்தின் தலைமைக்கா ரியாலயத்தில் நேற்று (3) இடம் பெ ற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் இரத்தினபுரி மாவட்டத் தில் சுமார் 84000 தமிழ் வாக்குகள் உள்ளன இந்தளவு வாக்குகளை எம்வசம் வைத்துள்ள நாம் ஒரு தமிழ்ப் பிரதிநிதித்துவம் இல்லாமல் திண் டாடுகிறோம்.
எமது மாவட்டத்தில் எமது மக்களின் பிரச்சினைகளை பேசுவதற்கு உரி மையான ஒரு பிரதிநிதித்துவம் இ ல்லாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
குறுகிய காலத்தில் மக்களின் நம்பி பிக்கையுடன் எழுச்சி பெற்று வரும் ஒரு தொழிற்சங்கமான எம்மை அவர்களுடன் இணைந்து இத்தேர்தலில் போட்டியிடுமாறு பல அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
ஆனால் ஏனைய கட்சிகளில் பெரும் பான்மை கட்சிகளில் நாம் போட்டியிடுவதன் மூலம் எமக்குரிய பிரச்சி னைகளுக்கு தீர்வு காண்பது என்பது முடியாத காரியம் இதனை நாம் அனுபவத்தில் கண்டுள்ளோம் அத் துடன் தமிழ் பிரதிநிதித்துவம் எனக் கூறிக்கொள்ளும் கட்சிகளாலும் சா தித்தவை ஒன்றும் இல்லை எனவே இரத்தினபுரி மாவட்டத்தில் நாம் இம் முறை தனித்து போட்டியிடுகின்றோம்.
200 வருடகால வரலாற்றை கொண்ட நாம் இன்னும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். ஆண்டாண்டுகளாக பாரம்பரிய தொழிற்சங்கங்கள் கட்சிகள் என பலருக்கும் வாக்களித்து ஏமாந்து விட்டோம் எனவே எமது மக்களின் உணர்வுகள் தேவைகளை நன்கு அறிந்து சேவையாற்ற கூடிய எமக்கு வாக்களித்து இரத்தி னபுரி மாவட்டத்தில் புதிய வரலாற்றை தோற்றுவிக்க நாம் ஒன்றிணைவோம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
(ஏ.ஏ.எம்.பாயிஸ்)