உள்நாடு

இலங்கை வானொலியின் கந்துரட்ட நிலையத்தில் கலந்துரையாடல்

இலங்கை வானொலியின் கந்துரட்ட(கண்டி) முஸ்லிம் தமிழ் சேவைகளில் தற்போது ஒலிபரப்பப்பட்டுவரும் சேவைகளுடன் மக்கள் பயனடையும் வகையில் கலாசாரம் , கல்வி, சுகாதாரம் , இன நல்லுறவு , கலை , மற்றும் இளம் சந்ததியினர் மாணவர்களது திறமைகளை வளர்க்கும் வகையிலமைந்த நிகழ்ச்சிகள் ஆகினவற்றை மேலும் ஒலிபரப்புச் செய்தல் இவற்றுக்கான வர்த்தக விளம்பரதாரர்களது ஒத்துழைப்புகளைப் பெற்றுக்கொள்வதுடன் அவர்களுக்கென நிகழ்ச்சி வாய்ப்புக்களை வழங்குவது ஆகியன பற்றிய கலந்துரையாடலொன்று கந்துரட்ட நிலையத்தில் நேற்று (2) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கந்துரட்ட நிலைய பணிப்பாளர் ஜெயசூரிய மற்றும் கொழும்பு முஸ்லிம் சேவையின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ரலீம் கந்துரட்ட அறிவிப்பாளர்களுடன் நிகழ்ச்சிக் கலைஞர்களும் கலந்துகொண்டு ஒலிபரப்பு தொடர்பான கருத்துரைகளை வழங்கினர்.

(உக்குவளை ஜலீல்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *