பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் பற்றி மக்கள் கருத்துக்களை கேட்டறியும் கல்குடா ஜம்இய்யதுல் உலமா..!
பாராளுமன்ற தேர்தலில் கல்குடா தொகுதி முஸ்லிம் பகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்துவது பற்றிய அபிப்பிராயங்களை கல்குடா ஜம்இய்யதுல் உலமா முன்னெடுத்து வருகிறது.
கல்குடா தொகுதியிலுள்ள சமூக மட்ட அமைப்புகள், இளைஞர் கழகங்கள், விளையாட்டுக் கழகங்கள் போன்றவைகளை கல்குடா உலமா சபை கட்டம் கட்டமாக அழைத்து அபிப்பிராயங்களை கேட்டு வருகின்றது.
இச் சந்திப்பின் தொடரில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியும் கலந்து கொண்டிருந்தார்.
கல்குடா தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தக்க வைத்துக் கொள்வதற்காக வேண்டியே இந்த முன்னெடுப்பை கல்குடா ஜம்இய்யது உலமா முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக கல்குடா ஜம்இய்யதுல் உலமா சந்திப்பின் போது தனது அபிப்பிராயத்தை தெரிவித்துள்ளார்.
(எச்.எம்.எம்.பர்ஸான்)