இது ஆரம்பம் மட்டுமே; எல்லை மீறினால் மரண அடி நிச்சயம் – ஈரான் இராணுவத் தளபதி எச்சரிக்கை
லெபனான் தாக்குதல்களுக்கு பழிவாங்கு முகமாக ஈரான் நேற்றிரவு இஸ்ரேல் மீது சரமாரியான ஏவுகணைத் தாக்குதல்களை நடாத்தியது.ஏறத்தாழ 400 ஏவுகணைகளை டெல்அவீவ் மற்றும் ஏனைய நகரங்கள் மீது ஏவியதாக ஈரான் இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மூன்று இஸ்லாமிய இராணுவ தளங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும் அதில் 80 வீத ஏவுகணைகள் சரியான இலக்குகளை எட்டியுள்ளதாகவும் இது இஸ்ரேலுக்கு பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை ஆக்கிரமிப்பாளர்களுக்கு தக்க பதில் கொடுகாகப்பட்டிருப்பதாக ஈரான் ஜனாதிபதி மசூத் தெரிவித்துள்ளார்.ஈரானின் அமைதி பாதுகாப்புக்காக வேண்டி இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் இது ஆரம்பம் மட்டுமே என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இத் தாக்குதல் குறித்து ஈரான் ஆன்மீகத் தலைவர் அலி கமேனி தனது எக்ஸ் தளத்தில் இட்ட பதிவொன்றில் நல்லவர்களை இழக்க நேரிட்டாலும் இறுதியில் வெற்றி பெற்றி பெற்று விட்டோம் எனத் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் எல்லை மீறினால் மரண அடி நிச்சயமென்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.