விளையாட்டு

இங்கிலாந்தை எதிர்கொள்ளும் பாகிஸ்தான் டெஸ்ட் குழாம் அறிவிப்பு

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் பாகிஜ்தான் அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் அணி குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகள் முல்தானிலும், 3வது போட்டி ராவல்பிண்டியிலும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணி விவரம்:

ஷான் மசூத், சவுத் ஷகீல், அமீட் ஜமால், அப்துல்லா ஷபீக், அப்ரார் அகமட், பாபர் அசாம், மிர் ஹம்சா, முகமட் ஹூரைரா, முகமட் ரிஸ்வான் (வி. கீ), நசீம் ஷா, நோமன் அலி, சைம் அயூப், சல்மான் அலி ஆஹா, சர்பராஸ் அகமட் (வி.கீ), ஷகின் ஷா அப்ரிடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *