கோரளைப்பற்று மத்தியில் சிறுவர் விழிப்புணர்வு
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் பிள்ளைகளை பாதுகாப்போம் சமமாக நடாத்துவோம் எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று செவ்வாய்க்கிழமை (01.10.2024) இடம் பெற்றது.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு முன்னால் ஆரம்பமான ஊர்வலம் வாழைச்சேனை ஆலிம் வீதி, கோழிக்கடை வீதி, முஹம்மதியா வீதி ஊடாக பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயத்தை சென்றடைந்தது.
கோறளைப்பற்று பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.றமீஸா தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் அதிதிகளாக கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான், ஓட்டமாவடி கோட்டக் கல்வி அதிகாரி ஏ.எம்.எம்.தாஹிர், பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், கோறளைப்பற்று மத்தி சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எஸ்.ஏ.எம்.பஸீர், வாழைச்சேனை பொலிஸ் உத்தியோகத்தர் கே.எம்.டபள்யூ பண்டார, பாடசாலை ஆசிரியர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தில் வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலை, பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயம், பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயம் என்பவற்றின் மாணவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சிறுவர் சபை அங்கத்தவர்கள் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் சிறுவர் மகளிர்
பிரிவு உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் தினைக்களம் , சமுர்த்தி திணைக்களம், சி.ஈ.ஆர்.ஐ. அரச சார்பற்ற நிறுவனம் ஆகியவை இணை அனுசரனை வழங்கியது.
(எஸ்.எம்.எம்.முர்ஷித்)