உள்நாடு

முஸ்லிம்களின் கல்வி உட்பட ஏனைய விடயங்களில் பூரண ஒத்துழைப்பை வழங்குவேன்..! -யாழ் அரச அதிபர் எம்.பிரதீபன்

யாழ் மாவட்டத்தில் தனது பூரண ஒத்துழைப்பை தருவதாக யாழ் மாவட்ட அரச அதிபர் தெரிவிப்பு.
யாழ் மாவட்ட அஹதிய்ய பாடசாலை மாணவர்களுக்கான கருத்தரங்கு ஒன்ற கடந்த செப்டம்பர் 29ஆம் திகதி யாழ்ப்பாண கச்சேரியில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றபோது நிகழ்விற்க தலைமைதாங்கிய யாழ் அரச அதிபர் எம்.பிரதீபன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
திணைக்களத்தின் வக்பு பிரிவு பொறுப்பாளர் ஏ.எஸ்.எம்.ஜாவித், அஹதிய்யா பாடசாலைகளுக்கு பொறுப்பான வியட அலுவல் எம்.ரி.எம்.இல்ஹாம், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர்.ஏ.ஹபீழ், யாழ்மாவட்ட அபிவிருத்தி உத்யோகத்தர் எஸ்.எம்.நிஸ்தாக், உஸ்மாணியா அஹதிய்யா பாடசாலை அதிபர் மௌலவி சுபியான், முஹைதீன் பெரிய பள்ளி தலைவர் ஜலீல், திணைக்கள அலுவலர் ஏ.எஸ்.எம்.றில்வான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
அரச அதிபர் தொடர்ந்து உரையாற்றுகiயில்.
அறநெறி பாடசாலைகளாக இருக்கலாம் அஹதிய்யா பாடசாலைகளாக இருக்கலாம் அதேபோல் கிறிஸ்தவர்களினதும் பௌத்தர்களினதும் பாடநெறிகளாக இருக்கலாம் மாணவர்களை நல்வழிப்படுத்துகின்ற அல்லது ஆற்றுப்படுத்துகின்ற செயற்பாடுகள் முனைப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இருந்தாலும் கவளையளிக்கக்கூடிய விடயம் எங்களுடைய பிள்ளைகள் தற்போதைய இளம் சமுகத்தைச் சேர்ந்த பிள்ளைகள் இத்தகைய பாட நெறிச் செயற்பாடகளில் கலந்த கொள்வது மிகக் குறைவாக உள்ளது. ஒருசில மதங்களைத் தவிர பௌத்த சமயத்தில் அவ்வாறில்லை கிறிஸ்தவ சமயத்திலும் அது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்துசமயம் இஸ்லாமிய சமயத்தில் பிள்ளைகளின் ஆர்வங்கள் குறைவாக இருக்குமென்ற நிலைப்பாடு உள்ளது. அந்த வகையில் எங்களுடைய இந்த யாழ்ப்பாண மாவட்டத்தில் அஹதிய்யா பாடசாலை ஒன்று இயங்கி வருவது உண்மையில் மகிழ்ச்சிக்குரிய விடயமாக உள்ளது. அதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் எடுத்துள்ள இந்த முயற்சி உண்மையில் பாராட்டப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.
இத்தகைய பிள்ளைகளுக்கு சரியான முறையில் அவர்களை வழிகாட்டுகின்ற ஒரு பயிற்சிக் கருத்தரங்கை இங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நான் நினைக்கின்றேன் சமயங்கள் அல்லது மதங்கள் குறிப்பிடுகின்ற விடயங்கள் எல்லாமே ஒன்றுதான் அது இறைவனுடைய நாமங்களை பெயர் சுட்டுவதாக அல்லது நாமங்களை சுட்டுவதாக அமைந்திருந்தாலும் மதங்கள் போதிக்கின்ற அந்த நல்ல பண்புகள் அல்லது நல்ல விடயங்கள் ஒருவரை நற்பிரஜையாக வருவதற்கரிய செயற்பாடுகளைத்தான் எல்லா மதங்களும் போதிக்கின்றன.
அந்த வகையில் எங்களுடைய மாவட்டத்தைப் பொருத்த வரையில் நான் நினைக்கின்றேன் குறிப்பிடப்பட்ட கணிசமான முஸ்லிம் சமுகத்தினர் தற்போது வாழ்ந்து வருகின்றார்கள். ஆகவே அவர்களுடைய இந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக உஸ்மாணியாக் கல்லூரி மற்றும் அஹதிய்ய பெண்கள் பாடசாலை ஆகியன நான் நினை;கின்றேன் உஸ்மாணியாக் கல்லூரியில் நடைபெற்ற சாரணியர் சம்பந்தமான நிகழ்விலே கலந்து கொண்டிருந்தேன் உண்மையில் அந்த பாடசாலை அதிபர் மிகவும் கஸ்டப்பட்டு அந்தப் பாடசாலையை பெற்றோர்களின் காத்திரமான ஒத்துழைப்புடன் வளர்ந்து வருவதை நான் நேரடியாக காணக்கூடியதாக இருந்தது.
அந்த வகையில் கணிசமான அல்லது காத்திரமான பெற்றொர்களின் பங்களிப்பு அங்கு உள்ளது. அதேபோல நான் நினைக்கின்றேன் கதீஜா மகளீர் பாடசாலையிலும் அத்தகைய ஏற்பாடுகள் இருக்கின்றன. உங்களுடைய இந்த செற்பாடுகளிலே முஸ்லிம் என்று சொல்கின்ற அந்த சமுகத்துடைய செயற்பாடுகளிலே இத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இன்றைய சமுகத்தில் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு மத்தியிலே இளைஞர்கள் பிள்ளைகள் இளம் சமுகத்தினர் முன்னேற வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. அச்சுறுத்தல் இருக்கின்ற சூழ் நிலைகள் உங்களைச் சூழ்ந்துள்ளது. நான் நினைக்கின்றேன் எங்களுக்கு முன்னே இருந்த பிரச்சினைகள் வேறு வடிவம். தற்போது இருக்கின்ற பிரச்சினைகள் வேறு வடிவங்கள். இலகுவாக உங்களை அனுகக்கூடிய வகையில் அல்லது உங்களை கட்டுப்படுத்தக் கூடிய வகையிலே இன்று பிரச்சினைகள் உங்களை சூழ்ந்துள்ளது. ஆகவே அவற்றில் இருந்து நீங்கள் விடுபட வேண்டுமாக இருந்தால் அல்லது அவற்றிற்குள் நுழையாது இருக்க நல்ல வழியிலே உங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுமாக இருந்தால் இத்தகைய நல்ல விடயங்களைப் போதிக்கும் இந்த அஹதிய்யாப் பாடசாலைகளுடைய செயற்பாடுகள் முதன்மையாக இருக்கின்றது.
அந்த வகையில் உங்களுடைய பணி பிள்ளைகளை நல்ல வழிப்படுத்த வேண்டிய ஒரு தலையாய பொறுப்பு உள்ளது. நான் நினைக்கின்றேன் முதல் முதலாக உஸ்மாணியாக் கல்லூரியில் அந்த சாரணியர் இயக்கத்தை செயற்படுத்தி இருந்தார்கள் நான் மாவட்டத்துடைய ஆணையாளராக இருந்தபோது அங்கே எங்களுடைய சாரணியருடைய சீருடை தயாரிக்கும் விடயத்திலும் சில வாதப் பிரதி வாதங்கள் இருந்தது. வழமையான சீருடைகள்தான் என்ற விடயம் இருந்தது. அவர்களுடைய சமயப் பண்பாடு இருக்குமாக இருந்தால் அது மாவட்ட ஆணையாளர் என்ற வகையில் நான் அனுமதியைத் தருகின்றேன் அவர்களுடைய பண்பாட்டு வகையில் அவர்கள் அதனை அணிந்து கொள்ளட்டும். ஏனென்றால் ஒரு பிள்ளை தனியே பாடசாலைக் கல்வியோடு மட்டும் தன்னுடைய வாழ்க்கையை முழுமையாக செய்து கொள்ள முடியாது. நல்ல தலைமைத்துவப் பண்புகளைக் கொண்டவர்களாக நீங்கள் மிளிர வேண்டும்.
பல்கலைக்கழக மாணவ மாணிவிகள் ஒரு ஆய்வுக்காக எங்களிடம் மூன்றுபேர் வந்திருந்தார்கள் அதிலே இரண்டு மாணவிகள் முஸ்லிம் மாNதொசமாக இருந்தது. ஏனென்றால் இன்று பல்வேறு உயர் துறைகளிலே முஸ்லிம் பெண்கள் நல்ல நிலையிலே வந்து கொண்டிருக்கின்றார்கள். எல்லா மதங்களும் பெண்களை வளர்த்துக் கொள்வதிலே அல்லது வெளிப்படுத்துவதிலே சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தன. ஆனால் இன்று அந்த நிலைமை மாறுபட்டு முஸ்லிம் பெண்கள் பலர் பல உயர் பதவிகளிலே பதவி வகித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே அந்த உயர்ந்த பணியை ஆற்றுவதற்கு உங்களுடைய அஹதிய்யாப் பாடசதலைகள் நல்ல பணியை ஆற்றுகின்றன. உண்மையிலேயே நீஙகள் அந்த கல்வியோடு மட்டும் நின்றுவிடய முடியாது இன்று சமுகத்தில் நல்ல பிரஜைகளாக நல்ல தலைமைத்துவ பண்புகள் கொண்டவர்களாக நீங்கள் வாழ வேண்டுமாக இருந்தால் நிச்சயமாக நல்ல விடயங்களை உங்களிடத்தில் உட்புகுத்திக் கொள்ள வேண்டும்.
பாடசாலைகளில் ஆரம்ப காலங்களில் நாங்கள் கற்ற காலங்களில் இயல்பாகவே நல்ல விடயங்கள் போதிக்கப்பட்டன அவற்றைக் கேட்கக்கூடிய சக்கியை நாங்கள் பெற்றிருந்தோம் ஆகவே இன்று உங்களை கட்டுப்படுத்தவது அல்லது வழிப்படுத்துவது ஆசிரியர்கள் அதிபர்கள் படும்பாடு அவர்களுக்குத்தான் தெரியும். அNதுவேளையில் உங்களை வளர்த்து எடுப்பதில் உங்கள் பெற்றோர்கள் படுகின்றபாடு அல்லது பெற்றோர்கள் படுகின்ற கஸ்டம் உண்மையில் நீங்களும் ஒரு காலத்தில் பெற்றோர்களாக வருகின்ற காலத்தில் அதனை உணர்வீர்கள் அப்போது அது எந்தவிதமான பிரியோசனமும் இல்லையென்றுதான் நான் சொல்லுவேன்.
இந்த வகையில் உங்களுடைய இத்தகைய இளைஞர்கள் இந்த கட்டமைப்பில் இருக்கினற வயது என்பது மிகவும் ஒரு உயர்வுக்கான தடைக்கல்லாக இருக்கின்ற வயதாகும். ஆகவே அந்த வயதிலே நீங்கள் சரியான இந்த அறநெறி கற்கைகள் அல்லது இந்த அஹதிய்யா கற்கைகளை நீங்கள் கற்றுக் கொள்வதன் மூலம் உங்களுடைய மத அனுஸ்டானங்களை பின்பற்ற முடியும். அதேவேளையிலே எங்களுடைய ஆலயங்கள் அந்த பள்ளிக்கூடங்கள் தொடர்பாகவும் பல விடயங்களை பார்த்து வருகின்றோம் அது உண்மையில் இந்து ஆலங்களாக இருக்கலாம் பள்ளிகளாக இருக்கலாம் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய தேவைப்பர்ட இருக்கின்றது.
ஆகவே நல்ல ஆரோக்கியமான சமுதாயம் ஒன்றை கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால் நீங்கள் இத்தகைய நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் உங்களுடைய சமுகம் முஸ்லிம் சார்ந்த பிரச்சினைகளை இலகுவாக கையாழக்கூடியவர்களாக நீங்கள் மாற முடியும். ஏனென்றால் இன்றைய இளைஞர்கள் இந்த பிள்ளைகள் பிரதேசத்தில் இருக்கின்ற பிள்ளைகளுடன் ஒப்பிடும்போது இந்த பாடசாலையிலே கல்வி பயில்கின்ற பிள்ளைகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகத்தான் இருக்கின்றது. ஆகவே அத்தகைய செயற்பாடுகளை நாங்கள் எதிர்காலத்தில் இந்த பிள்ளைகளை இணைத்துக் கொள்வதில் தனியார் கல்வி நிலையங்களும் காத்தரமான பங்கு வகிக்கின்றது. பலர் தனியர் கல்வி நிலையங்களுக்கு செல்கின்ற நிலைகூட காணப்படலாம். ஆகவே இத்தகைய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அனைவரும் ஒன்றினைந்து ஒற்றுமையாக செயற்படுவதன் மூலம் நல்ல ஒரு ஆலோக்கியமான சமுதாயத்தை எதிர் காலத்திலே கட்டியெழுப்பக்கூடியதாக இருக்கும். அந்த வகையில் இனங்களுக்கு இடையிலே மதங்களுக்கு இடையிலே ஒரு நல்ல பண்புகள் நல் உறவுகளை வளர்த்துக் கொள்ளக்கூடிய செயற்பாடுகள் இருக்கின்றன. நான் நினைக்கின்றேன் இதில் பலர் எனக்கு அறிமுகமானவர்கள் நாங்கள் எந்த விதமான இனவாதமுமின்றி நீண்டகாலமாக தொடர்பாடல்களுடன் எந்தவிதமான இன, மத முறண்பாடுகள் எதுவும் இல்லாமல் நாங்கள் இயல்பாகவே கதைத்துக் கொள்கின்றோம். இயல்பாகவே பழகிக் கொள்கின்றோம். அத்தகைய நல்லிணக்கம் கொண்ட ஒரு மாவட்டமாக மிளிர வேண்டுமானால் இத்தகைய அஹதிய்யாப்படசாலைகள் போன்ற நல்ல இன ஒற்றுமையை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த வகையில் எமது மாவட்டத்தில் இருக்கின்ற வளங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கு திணைக்களத்தின் அபவிருத்தி உத்தியோகத்தர் நிஸ்தாக் அவர்களுக்கு என்னுடைய அனுமதியைக் கொடுத்துள்ளேன். இந்த மாவட்டத்தில் உங்களுடைய மத, சமய அனுஸ்டானங்களை அதனோடு தொடர்பு பட்ட விடயங்களை நீங்கள் ஆற்றுப்படுத்திதுவதிலே எனது முழுமையாக ஒத்துழைப்பை வழங்கி இருக்கின்றேன் இங்கு நடைபெறும் மீலாத் நிகழ்வுகளில்கூட நான் நீண்டகாலமாக கலந்து கொண்டு வரகின்றேன். அரசாங்க அதிபர் என்று இருக்கும் நாங்கள் ஒரு மதத்தையோ அல்லது ஒரு இனத்தையோ சார்ந்து இருக்க முடியாது. எங்களுக்கு என்று சமய நம்பிக்ககைள் கொள்கைகள் இருக்கலாம் ஆனால் பதவிகளில் இருக்கின்றபோது அனைத்து மதங்களையும், அனைத்து சமயங்களையும் இனங்களையும் ஒரே சமமாக வைத்து வளர்த்துக்; கொள்ளும் பண்போடு நாங்கள் பார்த்துக் கொள்ள வேணடும் அந்த வகையிலே இதில் கலந்த கொள்ள வேண்டும் என்ற வகையில் வந்தேன் அந்த வகையில் எங்களுடைய மாவட்டம் என்றும் உங்களோடு துணை நிற்கும் உங்களுடைய செயற்பாடுகளுக்கும் நாங்கள் பூரணமான ஒத்துழைப்பை வழங்குவோம்.
இவ்வாறான அஹதிய்யா பாடசாலைகளின் செயற்பாடுகளிலே மாவட்டச் செயலகம் எந்தவகையில் பங்களிப்பு செய்ய வேண்டுமோ அந்த வiயில் முழுமையான பங்களிப்பை செய்வோம். இத்தகைய நல்ல விடயங்களை கிராம மட்டங்களிலும் பிரதேச மட்டங்களிலும் நீங்கள் செய்கின்றபோது அவர்கள் மிகவும் விணைத்திறனுடன் பங்குபற்றுவதன் மூலம் இத்தகைய நல்ல அறநெறியும் நல்ல இறைபக்தியும் நல்ல சமுக விழுமியங்களுக்கும் ஈடுபடக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்படும் உண்மையில் இந்த நிகழ்வை சிறப்பாக செயற்படுத்திய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர். திணைக்கள அலுவலர்களுக்கும் இதனை ஒழுங்கு செய்த எமது மாவட்டத்தின் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் நிஸ்தாக் அவர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவிக்கிறேன் என்றார்

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *