உள்நாடு

லோட்டஸ் ஜெல்பன் லங்கா சர்வதேச பாடசாலையில் உலக சிறுவர் தின கொண்டாட்டம்

உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு மத்திய முகாம் லோட்டஸ் ஜெல்பன் லங்கா சர்வதேச ஆங்கில மொழி பாலர் பாடசாலையில் சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் இன்று (01) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் பாடசாலை சிறுவர்கள் ஆடல், பாடல்களில் ஈடுபட்டதோடு அவர்களுக்கு குளிர்பானங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இப்பாடசாலையின் ஸ்தாபக தலைவர் வில்லியம் பீட்டர்சன் நோர்வே நாட்டில் இருந்து வருகை தந்து பாடசாலை சிறார்களுக்கு பரிசு பொதிகள் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எச்.எம்.ஹாரீஸ்  – மத்திய முகாம் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *