உள்நாடு

முஹம்மது அர்கம் அகில இலங்கை மட்டத்தில் தொடர் சாதனை

அகில இலங்கை பாடசாலைகளுக்கு மத்தியிலான மல்யுத்த விளையாட்டுப் போட்டி கண்டி திகன உள்ளக விளையாட்டரங்கில் நேற்று (30) நடைபெற்றது.

இதில் நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயா தேசிய பாடசாலை மாணவன் எம்.எஸ்.முகம்மது அர்கம் 71 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டு முதலாமிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுக் கொண்டார்.
நுரைச்சோலை பாடசாலை விளையாட்டுத்துறை வரலாற்றில் இரண்டாவது தங்கப்பதக்கத்தை பெற்றுக் தனது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இவர் கடந்த 2023ல் நடைபெற்ற போட்டியில் மூன்றாமிடம் பெற்று வெண்கலப்பதக்கத்தையும், கடந்த மாதம் இடம்பெற்ற போட்டியின் போது முதலாமிடம் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இத்துறையில் இவர் சர்வதேச மட்டம் வரை செல்ல வேண்டும் என பெற்றோர் மற்றும் பாடசாலை சமூகம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *