ஏறாவூரில் மீலாத் விழாவையொட்டி ஒரு கோடி ஸலவாத் சமர்ப்பணம்
பெருமானார் நபி (ஸல்) அவர்களின் உதயத்தை அகமகிழ்ந்து கொண்டாடும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட மீலாத் விழாவையொட்டி ஒரு கோடி ஸலவாத் சமர்ப்பணம் செய்யும் நிகழ்வு ஏறாவூரில் இடம்பெற்றது.
சமூக சேவைக்கான அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் உலமாப் பேரவையின் தலைவரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் தெஹிவளை ஜாமியா கௌஸியா அறபுக் கல்லூரியின் ஆலோசகருமான எச்.எம்.ஏ. ஹில்மி கௌஸி தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
நிகழ்வில் உரைகளும் ஸலவாத், ஸலாம் பைத்துகள் இடம்பெற்றதோடு வறிய மாணவர்களுக்கான புத்தகப் பைகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வுகளில், அல் ஆலிம் ஏ.எல். பதுறுதீன் ஷர்கி, பைஸானுல் மதீனா அறபிக் கனல்லூரியின் விரிவுரையாளர் அல்ஹாஜ் யூ. றஹீம்; பாரி, ஹஸனிய்யதுல் காதிரிய்யா அறபுக் கல்லூரி அதிபர் ஏ.ஏ. இப்றாஹிம் அஹ்மத் அஸீஸி றிபாய்யி, முன்னாள் காழி நீதவான் ஏ.சி. அப்துல் மதீத் உட்பட இன்னும் பல அதிதிகள் கலந்து கொண்டனர்.
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)