உள்நாடு

அ.இ.ஜ.உலமா புத்தளம் கிளையின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்ற இலவச மருத்துவ முகாம்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையுடன் புத்தளம் ஆயுர்வேத வைத்தியசாலை புத்தளம் நகர சபை மற்றும் United Development Foundation இணைந்து நடாத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் இன்று அல்லாஹ்வின் உதவியால் 28.09.2024 சனிக்கிழமை மிக விமர்சையாக நடைப்பெற்று முடிந்தன.

  1. நீரிழிவு நோய், அதிக இரத்த அழுத்தம்
  2. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் தாமதமாதல்
  3. அன்றாடம் ஏற்படும் காய்ச்சல், வயிற்று வலி
  4. மூட்டு வலி
  5. இடுப்பு வலி மற்றும் முழங்கால் வலி
  6. மூட்டு வீக்கம்
  7. முடக்கு வாதம்
  8. பித்தப்பை, சிறுநீரகக் கல் அகற்றல்
  9. வயிறு சம்பந்தமான நோய்கள்
  10. மலம் சார் வியாதிகள்

இம்முகாமில் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது.

வைத்தியர்: MASM. Munawwar அவர்களின் தலைமையில்
வைத்தியர்: M. Fahmy
வைத்தியர்: AHA. Nihar
வைத்தியர்: NF. Sumaiyya
வைத்தியர்: MHFH. Mushthary
இந்த வைத்திய குழாமினுடாக மருத்துவ முகாம் நடந்தேறியது.

காலை 8.30 மணிக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் உப தலைவர் அஷ்ஷேக் அல்காரி ரியாஸ் தேவ்பந்தீ அவர்களின் கிராஅதுடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் தலைவர் அஷ்ஷேக் ஜிப்னாஸ் அல்மிஸ்பாஹி அவர்களினால் தலைமை உரை நிகழ்த்தப்பட்டது.

புத்தளம் ஆயுர்வேத வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் முனவ்வர் அவர்களினால் ஆயுர்வேத வைத்தியசாலையின் முக்கியத்துவதை விளக்கப்படுத்திய பின் ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியர் பஹ்மீ அவர்கள் மூலமாக ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் என்ற தொனிப்பொருளில் சில விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டது.

காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 1.30 மணி வரை சுமார் 400 க்கும் மேற்பட்ட நோயாளர்கள் ஆண்கள் பெண்கள் வருகை தந்து பிரயோசனம் பெற்றனர்.

நடக்க முடியாதவர்களை அழைத்து வர Free Auto Service ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இலவசமாக ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வுக்கு பொறுப்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் உறுப்பினர்
அஷ்ஷேக் ஸனூஸ் (அஷ்ரபீ) செயல்பட்டார்.

இத்தருணத்தில் புத்தளம் நகர சபை செயளாலர் திருமதி பிரீதிகா அவர்களுக்கும் அதேபோன்று ஆயுர்வேத வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் முனவ்வர் அவர்களுக்கும்
United Development Foundation தலைவர் சகோதரர் ஜம்சீத் அவர்களுக்கும் மணல் குன்று பாடசாலையின் அதிபர் மற்றும் பழைய மாணவர்கள் அமைப்புக்கும் இணை அனுசரணை வழங்கிய அமைப்புகளுக்கும்

Al ashraq women’s society,
Womans rural development society,
United rural development society,
Nedumkulam agriculture society,
Arumbu children association,
Manalkundru muslim mahavidyalayam past people association & Manalkundru muslim mahavidyalayam
Masjidhus salaam manalkundru,
Masjidul falah kadayakulam,
Ashrafiyya masjidh ashrafiyya
ஜமிய்யா மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றது.

ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் 
நகரக் கிளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *