உள்நாடு

சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயம் வலய மட்டத்தில் 2 முதலிடங்களைப் பெற்று கிழக்கு மாகாண மட்டத்திற்கு தெரிவு

2024 சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்றப் வித்தியாலயம் வலய மட்டத்தில் 2 முதலாமிடங்களைப் பெற்று கிழக்கு மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது கோட்ட மட்டத்திலான போட்டிகளில் பாடசாலையின் தரம் 3,தரம் 4, தரம் 5 ஐச்சேர்ந்த ஆண்,பெண் 6 அணிகள் கலந்து கொண்டன. அதில் 2அணிகள் முதலாமிடத்தினையும்,4அணிகள் இரண்டாமிடத்தினையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இம்மாணவர்களை இப்போட்டிகளுக்காக பயிற்றுவித்த பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் எம்.எப்.எம்.றிபாஸ் ,மற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் என்.எம்.ஏ.ஆபாக் மற்றும் மாணவர்களை வழிப்படுத்திய மாஜிதா ஆசிரியை ,றிபானா ஆசிரியை ஆகியோர்களுக்கும் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் பாடசாலை அதிபர் எம்.ஐ.சம்சுதீன் உளிட்ட கல்வி சமூகம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

(அஸ்ஹர் இப்றாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *