உள்நாடு

உக்குவல அஹதிய்யா பாடசாலை ஆசிரியை ஆசிரியர்களுக்கான சேவைக்கால கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு

உக்குவல அஹதிய்யா பாடசாலை ஆசிரியை ஆசிரியர்களுக்கான சேவைக்கால கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு உக்குவல அஹதிய்யா பாடசாலை அதிபர் ஹாஜி எம்.எஸ். ஹலீம்தீன் அவர்களது ஏற்பாட்டில் அவரது உக்குவல இல்ல காரியாலயத்தில் நடைபெற்றது.

இதற்கான கொடுப்பனவுகளை முஸ்லிம் கலாசார திணைக்களம் அனுப்பிவைத்திருந்தது.

அத்துடன் உக்குவல பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட கலாசார நிகழ்வில் பங்குபற்றிய உக்குவல அஹதிய்யா மாணவர்களுக்கான சான்றுகளுடன் புத்தகப் பொதிகள் வழங்கிவைக்கும் வைபவமும் உக்குவல அஜ்மீர் மண்டபத்தில் அஹதிய்யா அதிபரின் ஏற்பாட்டில் நடைபெற்றது உக்குவல பிரதேச செயலகம் இவர்களுக்கான சான்றுகளை இப்பாடசாலை அதிபருக்கு அனுப்பிவைத்திருந்தது.

(உக்குவல – ஜலீல்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *