விளையாட்டு

இலங்கை எதிர் மே.இ. தீவுகளுக்கிடையிலான தொடருக்கான டிக்கெட் விற்பனை 6ஆம் திகதியிலிருந்து ஆரம்பம்

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான டிக்கெட் விற்பனை ஒக்டோபர் 6ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும், டிக்கெட்டுக்களை ஒன்லைன் மூலமாகப் பெற்றுக் கொள்ள www.srilankacricket.lk எனும் முகவரிக்குள் பிரவேசிக்க முடியும் எனவும் இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

மேலும் இப் போட்டித் தொடருக்கான டிக்கெட்டுக்களை ஒக்டோபர் 10ஆம் திகதி முதல் கொழும்பு வித்யா மாவத்தை மற்றும் தம்புள்ளை ஆர்.டி.ஐ.சி.எஸ் ஆகிய இடங்களில் டிக்கெட் கவுன்டர்கள் திறக்கப்படும் என்றும் ரி20 போட்டி நாட்களில் டிக்கெட்டுகள் தம்புள்ளை பிரதேச சபை அலுவலகத்திலிருந்து pற்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒருநாள் தொடருக்கான டிக்கெட்டுக்கள் பல்லேகல மைதான கவுண்டரில் ஒக்டோபர் 18ஆம் திகதி முதல் திறக்கப்பட்டு விற்கப்படும் ஒருநாள் போட்டி நாட்களில், டிக்கெட்டுகள் பலகொல்ல அபீத மைதானத்தில் இருந்து வழங்கப்படும எனவும் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *