உள்நாடு

பெட்ரோல் 21 ரூபாவினாலும், டீசல் 24 ரூபாவினாலும் குறைந்தது

இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம், அதன் எரிபொருட்களின் விலைகளைத் திருத்துவதற்குத் தீர்மானித்துள்ளது.


மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்தின் பிரகாரம், இந்த எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, 332 ரூபாவாகக் காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 21 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 311 ரூபாவாகும் என, இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.


இதேவேளை, டீசல் லீற்றரின் விலை 24 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *