முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 3 ஆண்டுகளில் 27 கோடி ரூபா செலவு
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோத்தாபய ராஜபக்ஷ ஆகிய ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸவின் மனைவி ஹேமா பிரேமதாஸ ஆகியோரின், கடந்த மூன்று ஆண்டுகளுக்கான செலவு 27 கோடி ரூபா என, மத்திய வங்கியின் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
இவர்களுக்காக, 2022 இல் 70000000 ரூபாவும், 2023 இல் 80000000 ரூபாவும், 2024 இல் 110000000 ரூபாவும் வழங்கப்பட்டுள்ளதாக, பேராதனைப் பல்கலைக் கழகப் பொருளியல் விஞ்ஞான புள்ளி விபரவியல் கல்விப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள விபரமளித்தார்.
( ஐ. ஏ. காதிர் கான் )