Saturday, September 28, 2024
Latest:
உலகம்

மீனவர் விவகாரத்தை புதிய ஜனாதிபதியிடம் தெரிவிக்க பிரதமர் நரேந்திர மோடி கோரியுள்ளேன் சிறையில் உள்ள 145 மீனவர்கள், 191 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளேன் என்று நரேந்திர மோடி உறுதி அளித்தார் முதல்வர் மு. க. ஸ்டாலின் பேட்டி..!

மீனவர் விவகாரத்தை இலங்கையின் புதிய அதிபரிடம் தெரிவிக்க பிரதமரிடம் கோரியுள்ளேன். இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்கள், 191 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளேன். 

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை உடனே வழங்க பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலிவுறுத்தினேன். 

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது; தமிழ்நாட்டின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளித்தேன். பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு இனியதாக இருந்தது. சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம் மத்திய தமிழ்நாடு அரசு பங்களிப்புடன் செயல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை பாதுகாக்க, சிறைபிடித்த மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி மனு அளித்தேன். இனிய சந்திப்பை மகிழ்ச்சியான சந்திப்பாக மாற்றுவது பிரதமரின் கையில் தான் உள்ளது. மீனவர் பிரச்சனைக்கு வெளியுறவு அமைச்சர் மூலம் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் உறுதி அளித்தார்.

மீனவர் விவகாரத்தை இலங்கையின் புதிய அதிபரிடம் தெரிவிக்க பிரதமரிடம் கோரியுள்ளேன். இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்கள், 191 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளேன்.  முதல்வர்களுக்கு 15 நிமிடம்தான் பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்குவார்கள், எனக்கு 40 நிமிடம் ஒதுக்கினார். கச்சத் தீவை திமுக தாரை வார்த்ததாக திரும்பத் திரும்ப தவறான தகவலை பரப்ப வேண்டாம். செந்தில் பாலாஜி சட்டப்படி வழக்கை எதிர்கொண்டு வழக்கில் இருந்து விடுதலை பெறுவார். காங். மூத்த தலைவர் சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்று கூறியுள்ளார். 

(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *