குமார வெல்கம காலமானார்
முன்னாள் அமைச்சரான குமார வெல்கம கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையின் இன்று காலை உயிரிழந்தார்.
இறக்கும் போது அவருக்கு 74 வயது.
நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் கொழும்பில் தனியார் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாக குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர்.
இலங்கையின் மிகவும் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினரான இவர், பல்வேறு முக்கிய அமைச்சுகளை பொறுப்பேற்று இருந்தவர்.