Saturday, September 28, 2024
Latest:
உள்நாடு

அரச ஊழியர்கள் நற்பண்புடன் சேவையாற்ற வேண்டும்; மத்திய மாகாண ஆளுநர் தெரிவிப்பு

அரச உத்தியோகத்தர்களின் கல்வித்தரம் எவ்வளவோ உயர்வாக இருந்தாலும், அவர்கள் நல்ல மனதுடனும் நற்பண்பும் இல்லாவிடின், மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் அவர்கள் பின்தங்கியே இருப்பார்கள்,
என மத்திய மாகாண புதிய ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் தெரிவித்தார்.

மத்திய மாகாண ஆளுநராக நேற்றைய தினம் (27) கண்டி ஆளுநர் அலுவலகத்தில் பதவியேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் பேசிய ஆளுநர் சரத் அபே-கோன் கூறியதாவது, “வாடிக்கையாளர் ஒருவர் சேவையைப் பெற்றுக்கொள்வதற்காக ஒரு நிறுவனத்திற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளும் போது, ​​குறித்த நபர் இன்று நாற்காலியில் இல்லை, நாளை வருவாரா என்பது தெரியாது என வாடிக்கையாளருக்கு தெரிவிப்பதனால் சேவையைப்பெற நாடுவோருக்கு எந்தப் பலனும் இல்லை என்றார்.

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் விண்ணப்பதாரர்களில் ஒரு சிறிய வீதமானவர்கள் மட்டுமே ல்கலைக்கழகம் சென்றாலும் கூட பல்கலைக்கழகத்தை நடத்துவதற்குப் பல்கலைக்கழகத்தைக் காணாத அப்பாவி மக்கள் வரி செலுத்துகின்றார்கள்.
எனவே முழு மக்களுக்கும் சேவையாற்றுவதற்கு அரச சேவையிலுள்ளோர் கடமைப்பட்டிருக்க வேண்டும் என ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் தெரிவித்தார்.

மத்திய மாகாண சபைத் தலைவர் எல்.டி. நிமலசிறி தேசிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் கமகெதர திஸாநாயக்க, மத்திய மாகாண பிரதான செயலாளர் அஜித் பிரேமசிங்க, ஆளுநரின் செயலாளர் மஞ்சுளா மட-ஹபொல, கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன், மற்றும் அமைச்சுகளின் செயலாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(ரஷீத் எம். றியாழ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *