எரிபொருளுக்கான வரியை நீக்குவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்; முன்னாள் அமைச்சர் காஞ்சன
எரிபொருளுக்கான வரியை நீக்குவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென முன்னாள் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர வலியுறுத்தியுள்ளார்.
“எரிபொருள் மீதான வரியை நீக்குவோம் என்று தேர்தல் பேரணிகளில் சொன்னார்கள், அது சுமார் ரூ. லிற்றருக்கு 150/-. தற்போதைய சட்ட விதிகளின்படி, 30ம் திகதி இரவுக்குள் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட வேண்டும். அவர்கள் வாக்குறுதி அளித்தபடி வரிகளை நீக்கினால், ஒரு லிற்றர் டீசல் ரூ. 100” என்றார்.
இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் இடைநிறுத்தப்பட்ட கடந்த அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிவாரண நடவடிக்கைகளை ஜனாதிபதி தேர்தலை கருத்திற்கொண்டு தொடர்ந்தும் அமுல்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு முன்னாள் அமைச்சர் நன்றி தெரிவித்தார்.
“இலங்கை மின்சார சபையின் அதிகாரிகளால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஒக்டோபர் மாதத்துக்கான மின்சார விலை திருத்தம் திட்டமிடப்பட்டுள்ளது. தாமதமின்றி இதை PUCSL ஒப்புதலுக்கு அனுப்புமாறு அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம், ”என்று அவர் கூறினார்