உர மானிய அதிரிப்பு உட்பட அரசின் முயற்சிகள் வரவேற்கத்தக்கது; முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர
நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட உர மானியம் அதிகரிப்பு உட்பட பல அரசாங்க முயற்சிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது குறித்து முன்னாள் அமைச்சர் காஞ்சன தனது X தளத்தில் குறிப்பிடுகையில், ஆரம்பத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தினால் நிதியளிக்கப்பட்ட இந்தத் திட்டங்கள் ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இடைநிறுத்தப்பட்டது.
பின்னர் தற்போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கீழ் இந்த திட்டங்கள் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புத்துயிர் பெற்ற கொள்கைகளில் உர மானியத்தை 15,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக அதிகரிப்பது மற்றும் மீனவர்களுக்கு எரிபொருள் மானியத்தை அறிமுகப்படுத்துவது ஆகியவை இதில் அடங்கும் என குறிப்பிட்டுள்ளார்.