உள்நாடு

ஒலுவில் அல் -ஹம்றா மாணவன் MIM.பத்தாஹ்ன் தேசிய மட்ட கணித வினாடி வினாப்போட்டியில் தங்கம் வென்றார்.

2024.09.26 ம் திகதி மீப்பேயில் நடைபெற்ற தேசியமட்ட கணித வினாடி வினாப்போட்டியில் கிழக்கு மாகாணம் சார்பாக பங்குபற்றிய ஒலுவில் அல் -ஹம்றா தேசிய பாடசாலையின் தரம் 13 மாணவன் முஹம்மது இர்சாத் முஹம்மது பத்தாஹ்ன்
முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார் .அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் சார்பில் பங்குபற்றி வெற்றிபெற்ற ஒரே மாணவன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது

இம் மாணவனுக்கும், அதிபர் அஷ்ஷேக் யூ.கே அப்துர்ரஹீம் மற்றும் இணைப்பாட விதான பிரதி அதிபர் ஜே.வஹாப்தீன், ஆசிரியர்களுக்கும் ஒலுவில் மக்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

இஸட்.ஏ.றஹ்மான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *