முஸம்மில் அதிபரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு
ஹெம்மாதகமை மடுள்போவையை பிறப்பிடமாகக் கொண்ட M B M முஸம்மில் அதிபர் அவர்களின் இழப்பு ஹெம்மாதகமை பிரதேசத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும் .
இவரது ஆரம்பக் கல்வியை மடுள்போவை முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆரம்பித்து சாதாரண தரம் வரை கற்று காத்தான்குடி மத்திய கல்லூரியில் உயர்தரத்தை சிறப்பாக நிறைவேற்றி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று பின் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டபின் கல்வி டிப்ளோமா பாடநெறி முடித்தார் பின் 2005 ஆம் ஆண்டு பேராதனையில் எம் ஏ முதுமானி பட்டத்தை பெற்றார் 2012 ஆம் ஆண்டு இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் கல்வி தொடர்பான முதுமானி கற்கை நெறியை நிறைவு செய்தார் தே . க நிர்வாகத்தில் கல்வி டிப்ளோமாவையும் களனி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் டிப்ளோமாவையும் பெற்று கல்வி நிர்வாகிகளுக்கான நிபுணத்துவ சான்றுகளையும் 2010 ஆம் ஆண்டு பெற்றுள்ளார்.
மடுள்போவை முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபராக 2010 ஆம் ஆண்டு கடமையாற்றியுள்ளார். முதலாவது ஆசிரியர் நியமனம் இவர் கல்வி கற்ற மடுள்போவை முஸ்லிம் வித்தியாலயத்தில் கிடைக்கப்பெற்று இரண்டு வாரங்கள் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பாடசாலையில் பழைய மாணவராகவும் அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினராகவும் ஊரின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டார் இப் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளுக்காக அதிபராக இருந்த காலப்பகுதியில் அயராது பாடுபட்டார் பாடசாலையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபத்தை நிர்மாணிப்பதற்காக பாடுபட்டமை அதேபோன்று கொடேகொடை முஸ்லிம் வித்தியாலயத்திலும் தமது பாடசாலையிலும் பாடசாலை கீதம் ஒன்றாக காணப்பட்டபோது அதை மாற்றி அமைக்க அன்வர் ஆசிரியரினதும் ஹெம்மாதகமைப் பிரதேசத்தைச் சேர்ந்த கலா பூசணம் நிசார் ஆசிரியர் அவர்களின் உதவியோடு தற்போது தமது பாடசாலையில் நடைமுறையில் உள்ள பாடசாலை கீதத்தை வடிவமைத்தார் புலமை பரிசில் பரீட்சையில் ஐந்து பேரை சித்தியடைய வழிகாட்டியமை இதுபோன்று மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக பாடுபட்டார் சுமார் இரண்டு வருடங்கள் கடமையாற்றி 2012 ஆம் ஆண்டு இடமாற்றம் பெற்று சென்றார் .
கேகாலை மாவட்டத்தில் உள்ள புனித செம்மேரிஸ் கல்லூரியில் பிரதி அதிபராக கடமையாற்றிக் கொண்டிருந்தார் சுமார் ஒரு வருட காலம் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் 2024/9/24 ஆம் திகதி உயிரிழந்தார் மாவனல்லை மஹவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்தார் அல்லாஹுத்தஆலா அவருக்கு மேலான சுவனத்தை வழங்க வேண்டும் என பிரார்த்திப்போம்.
(ஜிப்ரி சரீப்)