உள்நாடு

ஓய்வூதிய உரிமைகளை இழந்த 85 எம்.பி க்கள்

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் காரணமாக, சுமார் 85 எம்.பி. க்கள், தமது ஓய்வூதிய உரிமைகளை இழந்துள்ளனர்.

பாராளுமன்றத்தில் ஐந்தாண்டுகளை நிறைவு செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், வாழ்நாள் முழுவதும் மாதமொன்றுக்கு, (45,000.00) நாற்பத்தைந்தாயிரம் ரூபாவை வாழ்நாள் ஓய்வூதியமாகப் பெறுவார்கள்.

ஆனால், அடுத்த ஆண்டு முடிவடையவிருந்த பாராளுமன்றம், தற்போது கலைக்கப்பட்டுள்ளதால், 85 எம்.பி. க்கள் அந்த சிறப்புரிமைகளை இழப்பார்கள். ஒன்பதாவது பாராளுமன்றம், 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதியன்று தொடங்கியது.

அதன்படி, பாராளுமன்றத்தின் பதவிக் காலம், அடுத்த (2025) ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைய இருந்தமை குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *