போஷாக்கு குறைவான பிள்ளைகளுக்கு போஷாக்குள்ள உணவுகளை தயாரிப்பது தொடர்பான விழிப்புணர்வு
நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட போஷாக்கு மட்டம் குறைவாக காணப்படும் பிள்ளைகளுக்கு இலகுவான முறையில் போஷாக்குள்ள உணவுகளை தயாரித்து வழங்குதல் தொடர்பான தாய்மார்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் ராகுலநாயகி சஜிந்ரன்; தலைமையில் நேற்று (25) நாவிதன்வெளி கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
தற்போது காணப்படும் சூழ்நிலையில் சிறுவர்கள் உணவுகளில் விருப்பமின்மை இன்றி காணப்படுகின்றார்கள். இதனால் அவர்களின் போஷாக்கு மட்டம் மிக குறைவாக காணப்படுகின்றது. இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு அவர்களுக்கான உணவுகளை இலகுவான முறையில் தயாரித்து வழங்குவதற்கான அறிவுரைகள் தொடர்பான செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனூடாக எதிர்காலத்தில் நல்ல போஷாக்குள்ள குழந்தைகளை உருவாக்க முடியும் என கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் நாவிதன்வெளி சுகாதார வைத்திய பணிமனையின் வைத்தியர் எம். எம். பாயிஸ் கலந்து கொண்டு போசாக்கான உணவுகள் மற்றும் அதன் தயாரிப்பு முறைகள் தொடர்பாக தாய்மார்களுக்கு விளக்கமளித்தார்.
இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட போஷாக்கு மட்டம் குறைந்த பிள்ளைகள் மற்றும் தாய்மார்கள், நாவிதன்வெளி பிரதேச செயலக சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர்கள், நாவிதன்வெளி சுகாதார பணிமனையின் உத்தியோகத்தர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள் மற்றும் பொது சுகாதார தாதியர்கள் ஆகியோர் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
ஏ.எச்.எம்.ஹாரீஸ்