உள்நாடு

உத்தியோக பூர்வமாக ஒப்படைக்காத வாகனங்கள் தொடர்பில் விசாரணை

“ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான வாகனங்களை, உத்தியோக பூர்வமாக ஒப்படைக்காமல், ஒவ்வொரு இடங்களிலும் நிறுத்திச் சென்றமை தொடர்பில் விசாரணையொன்று நடத்தப்படும்” என, தேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி செயலக வளாகத்தில் இன்று (25) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


புதிய ஜனாதிபதி பதவியேற்றுள்ள நிலையில், ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான வாகனங்களை, செயலகத்திற்கு அருகாமையில் பால தக்ஷ மாவத்தையில் அமைந்துள்ள வாகனத் தரிப்பிடத்திலும், மன்றக் கல்லூரிக்கு அருகாமையிலும் நிறுத்திச் சென்றுள்ளமை காணக் கூடியதாக உள்ளது.


தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க இன்று (25) காலை பால தக்ஷ மாவத்தையில் அமைந்துள்ள வாகனத் தரிப்பிடத்திற்கு வந்திருந்து, குறித்த வாகனங்களைப் பார்வையிட்டார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *