3 இலட்சத்தைக் கடந்த நிராகரிக்கப்பட்ட வாக்குகள்; ஆராய தேர்தல் ஆணைக்குழு முடிவு
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்து ஆராயவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, கடந்த 21ஆம் திகதி நடந்த தேர்தலில் 300,300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையத்தின் தலைவர் ஆர். எம். ஏ. எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது பதிவான வாக்குகளில் சதவீதமாக 2.2 வீதமாகும் ஆகும்.
எனினும், 2019 ஜனாதிபதித் தேர்தலில் 135,452 வாக்குகளே நிராகரிக்கப்பட்டன. இது பதிவான வாக்குகளின் சதவீதத்தில் 0.85 வீதம் ஆகும். இந்த பகுப்பாய்வின் பின்னரே வாக்கு நிராகரிக்கப்பட்டதற்கான உண்மைகளை அடையாளம் காண முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.