அரச ஊடகங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக, கலாநிதி உதித்த கயாஷான் குணசேகர மற்றும் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக கலாநிதி செனேஷ் திசாநாயக்க பண்டார ஆகியோர், வெகுஜன ஊடக அமைச்சர் விஜித ஹேரத்தினால் இன்று (25) நியமிக்கப்பட்டுள்ளனர்.
கலாநிதி உதித்த கயாஷான் குணசேகர, களனிப் பல்கலைக் கழகத்தில் நுண்கலை கற்கைகள் பிரிவு சிரேஷ்ட விரிவுரையாளர் ஆவார்.
கலாநிதி செனேஷ் திசாநாயக்க பண்டார, சிரேஷ்ட விரிவுரையாளராகவும் புகழ் பெற்ற திரைப்பட இயக்குநராகவும் விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
( ஐ. ஏ. காதிர் கான் )