சீ.ஐ.டி விசாரணை அறிக்கை கோரும் பரீட்சைகள் திணைக்களம்
புலமைப் பரிசில் வினாத்தாள் கசிவு தொடர்பான விசாரணை அறிக்கையினை பரீட்சை திணைக்களம் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் கோரியுள்ளது.
இது தொடர்பான அறிக்கையை மீளாய்வு செய்து மேலதிக நடவடிக்கைகளை எடுக்கும் நோக்கில் இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இந்த விசாரணை அறிக்கை மீளாய்வின் பின் மேலும் பலர் கைது செய்யப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.