Saturday, August 30, 2025
Latest:
உள்நாடு

கல்வி, சமூகப் பணியாற்றிய முஸம்மில் அதிபர் காலமானார்

மாவனல்லை ஹெம்மாத்தகம பிரதேசத்தில் சமூக, சமய, கல்வித் துறைகளில். நீண்ட காலமாக பங்களிப்பாற்றிய அதிபர் எம். பி .எம் முஸம்மில் (வயது 58) இன்று( 24) காலமானார்.

கேகாலை புனித மரியாள் கல்லூரியின் பிரதி அதிபராக பணியாற்றிய இவர் மடுள்போவ பாதிபிய்யா முஸ்லிம் வித்தியாலயம், களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி ஆகியவற்றின் அதிபராகவும். மல்வானை அல் முபாரக்தேசிய கல்லூரியின் பிரதி அதிபராகவும் பணியாற்றியவராவார்.

அதிபர் எம் பி எம் முஸம்மில் கன்னத்தோட்டை சுலைமானியா மத்திய கல்லூரி ,மடவளை மதீனா தேசிய கல்லூரி ,மாவனல்லை சாஹிரா கல்லூரி என்பவற்றிலும் நீண்ட காலமாக ஆசிரியராக பணியாற்றியவர்.

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட இவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலே இன்றுகாலமானார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம். நாளை லுஹர் தொழுகையைத் தொடர்ந்து (25/9/2024) ஹெம்மாத்தகம மடுள்போவ ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப் பபடவுள்ளதாக அறிவிக்கப்பபட்டுள்ளது.


(ரஷீத் எம். றியாழ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *