ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானம்
பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக இணைந்து செயற்படுவதற்கு, ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
இன்று (23) மாலை கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட கூட்டமொன்றில் இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு, ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் ஒருவர் தீர்மானித்துள்ளார்.
“எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு, இரு கட்சிகளும் இணைந்து செயற்படவேண்டும்” என, பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளைத்தொடர்ந்தே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக, ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு எதிரான வலுவான கூட்டணியை அமைப்பதற்கு, ஏனைய கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பதற்கும், இன்றைய (23) கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
( ஐ. ஏ. காதிர் கான் )