ரணிலோடு சேரப்போவதில்லை; நானே பிரதமர் வேட்பாளர் – சஜித் பிரேமதாச
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பிரதமர் வேட்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச களமிறங்கவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு கட்சி கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டதுடன் கூட்டணிக்குள் அவரது தலைமையை உறுதிப்படுத்தியுள்ளது. மேவும் தனக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் சஜித் பிரேமதாச தெளிவுபடுத்தினார்.