உள்நாடு

ஜனாதிபதித் தேர்தல்; கட்டுப்பணங்களை இழந்த 35 வேட்பாளர்கள் – தேர்தல் ஆணையாளர்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 38 வேட்பாளர்களில் 35 வேட்பாளர்கள் தங்களது கட்டுப்பணத்தை இழக்க நேரிடும் என தேர்தல்கள் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்கள் குறைந்தபட்சமாக 12.5% ​​வாக்குகளைப் பெறாத காரணத்தினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு வீதம் 79% க்கும் அதிகமாக இருந்தது. இருப்பினும் இது கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலை விட சற்று குறைவானதாகும். அதற்கமைய கடந்த 2019இல் 83% ஆக வாக்குப்பதிவு இருந்தது என ஆணையாளர் நாயகம் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *